கனடாவில் கால் நூற்றாண்டு காலமாக இயங்கிவரும் புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் Covid -19 தாக்கத்தினால் புங்குடுதீவு மக்கள் படும் அவல நிலையை உள்வாங்கி தொழில்களை இழந்து பாதிக்கப்பட்ட மிகவும் வறிய நிலையிலுள்ள 350 குடும்பங்களுக்கு சுகாதார அதிகாரிகளினதும், காவற்துறை அதிகாரிகளினதும் அறிவுறுத்தலின்படி உலர் உணவுப்பொதிகள் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டன.
இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான முதற்கட்ட பங்களிப்பை கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் அனைவரும் இணைந்து ஏறக்குறைய மூன்றரை இலட்சம்(CAN$ 2850) வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலதிக பணம் தேவைப்பட்டபோது எமது சங்கத்துக்கு உதவிகளை வழங்கி வரும் வர்த்தக பிரமுகர்(747 Auto Parts ) திரு. துரைச்சாமி பூரணகுமார் (CAN$ 2000) இணைந்து வழங்கியுள்ளார்.