பல ஆண்டுகளாக புங்குடுதீவில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பல ஆவிணங்கள் இறப்பினை சந்தித்துக் கொண்டன.
இதனால் புங்குடுதீவு நலன் விரும்பிகள் புங்குடுதீவு தரவை ஓரம் மற்றும் வயல்வெளிகள் போன்ற இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து நீர் வழங்கிக் கொண்டிருந்தனர்.
பின்னர் நீர் வழங்கும் திட்டத்தினை புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் கையிலெடுத்து செயல்பட்டு கொண்டிருந்தது.
கடந்த சில வருடகாலமாக இதனை முன்னெடுத்துச் செல்லாமல் விடுபட்டு இருந்ததை ஒட்டி நடப்பாண்டு நிர்வாகம் இத்திட்டத்தினை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடிவெடுத்து நடைமுறைப்படுத்த உள்ளது.
இதற்கான நிதியுதவி வழங்க வரும் நல்லுள்ளங்களை புங்குடுதீவு பழையமாணவர் சங்கம் வரவேற்று இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த உள்ளோம்
கோமாதா நீர் அருந்தும் திட்டம் மூலம் ஆவணங்களின் அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்று நம்புகின்றோம்.
நன்றியுடன்,


